மாநகர பஸ் மோதி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.8.40 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (59). இவர் கடந்த 13.5.2015 அன்று வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார்.
அடையாறு அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியே வந்த மாநகர பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து துரைக்கண்ணு மீது வேகமாக மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்தநிலையில் துரைக்கண்ணுவின் மகன் செல்வம் இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சாந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் உயிரிழந்தவர் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார். மேலும், தினம் கூலியாக ₹700 வாங்கி வந்தாக கூறப்படுகிறது. அவரது மரணம் குடும்பத்தினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாநகர பேக்குவரத்து நிர்வாகம் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ₹8 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும், என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : deceased , Rs 8.40 lakh,compensation , family , deceased
× RELATED குடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி!