×

கொடுங்கையூர் அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஆசாமிக்கு தர்மஅடி

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ஸ்ரீ பவானியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலில் இருந்து சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது, ஒருவர் கோயில் உண்டியலை உடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொதுமக்களை பார்த்த அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திருவொற்றியூர் கார்கில் நகர் 3வது தெருவை சேர்ந்த செல்வம் (45) என்பதும், குப்பையில் கிடக்கும் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து, விற்பவர் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Tags : Asami ,temple ,Undiyal ,Kodungayoor Amman , Asami tries, break, Undiyal , Kodungayoor Amman temple
× RELATED வெளியூர் செல்ல அனுமதி கோரி மரத்தில் ஏறி ஆசாமி ரகளை