×

நாடு முழுவதும் அக்.2ம் தேதி 600 கைதிகள் விடுதலை

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில்,  மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, பொது மன்னிப்பின் கீழ்  தகுதியுடைய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி,  2018 அக்டோபர் 2 முதல் 2019 ஏப்ரல் 6 வரை நாடு முழுவதும் 1,424 கைதிகள், விடுவிக்கப்பட்டனர். 3வது கட்டமாக வரும் அக்டோபர் 2ம் தேதி  600 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இதற்கான இறுதி பட்டியலை முடிவு செய்ய, மாநில  அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.  தண்டனை காலத்தில் பாதி காலத்தை முடித்த 55  வயதுக்கு மேற்பட்ட பெண், திருநங்கைகள், 60 வயதுக்கு மேற்பட்ட  ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.


Tags : detainees , 600 detainees,released,nationwide
× RELATED பயிற்சி முடித்துள்ள காவலர்கள்...