×

அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த 20ம் தேதிமுடன் முடிவடைந்த வாரத்தில், 38.8 கோடி டாலர் சரிந்து, 42857.2 கோடி டாலர் ஆனது. கரன்சி மதிப்பு மற்றும் தங்கம் கையிருப்பு சரிந்ததே இதற்கு காரணம். கரன்சி மதிப்பு 12.5 கோடி டாலர் குறைந்து 39.667 கோடி டாலராக ஆனது. தங்கம் கையிருப்பு, 25.9 கோடி டாலர் சரிந்து 27.843 கோடி டாலராக இருந்தது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு, 362.3 கோடி டாலராக குறைந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட்டில் 43,057.2 கோடி டாலராக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு சரிந்துள்ளது. அதற்கு முந்தைய வாரமும் 64.9 கோடி டாலர் சரிந்து 42.896 ேகாடி டாலராக ஆகியிருந்தது.


Tags : Foreign exchange,reserves, decline
× RELATED தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்...