×

வுஹான் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன்

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கியுடன் மோதிய சபலென்கா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ரிஸ்கி 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சபலென்கா 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று தொடர்ந்து 2வது ஆண்டாக வுஹான் ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த தொடரில் கோப்பையை தக்கவைத்த முதல் சாம்பியன் என்ற பெருமை சபலென்காவுக்கு கிடைத்துள்ளது.

Tags : Wuhan Open Tennis Sabalenka Champion , Wuhan,Open Tennis,Sabalenka,Champion
× RELATED 35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த பார்முலா 1 கார் பந்தயம் தள்ளிவைப்பு