×

தெற்காசிய யு-18 கால்பந்து முதல் முறையாக இந்தியா

சாம்பியன்: பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி சாதனை
காத்மாண்டு: ‘சாப்’ கோப்பைக்கான தெற்காசிய யு-18 கால்பந்து போட்டித் தொடரில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. காத்மாண்டுவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் யு-18 அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே இந்திய வீரர் விக்ரம் பிரதாப் சிங் அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். வங்கதேச வீரர் யாசின் அராபத் 40வது நிமிடத்தில் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாகப் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

கடைசி வரை இழுபறி நீடித்த நிலையில் இந்திய வீரர் ரவி பகதூர் ராணா (90’ + 1’) வெற்றி கோல் போட்டு அசத்தினார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று சாப் யு-18 கோப்பையை முதல் முறையாக முத்தமிட்டது.இந்திய அணி வீரர் நிந்தோய்ன்கன்பா மீட்டி, தொடரின் மிக மதிப்பு வாய்ந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். சாதனை படைத்துள்ள இந்திய இளைஞர் கால்பந்து அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Tags : India ,time ,South Asian , India ,first time,South Asian,U-18,football
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்