×

இந்தியாவில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு: இந்தியாவுக்கான சவூதி அரேபிய தூதர் பேட்டி

ரியாத்: ரூ.7 லட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக சவுதி அரேபியா தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான சவூதி அரேபியா தூதர் சவூத் பின் முகமது அல் சதி அளித்த பேட்டியில் கூறுவதாவது; சவூதி அரேபியாவின் முதலீட்டுக்கு சிறந்த தளமாக இந்தியா திகழ்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா 100 பில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடியை  பெட்ரோகெமிக்கல்ஸ், ஆற்றல், சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம், விவசாயம் போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.

இந்த பின்னணியில்தான் மேற்குவங்கத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், மகாராஷ்டிரத்தில் பெட்ரோ கெமிக்கல்ஸ் திட்டம் ஆகியவற்றில் சவூதி அரேபியாவின் ஆரம்கோ நிறுவனம் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சவுதியில் அராம்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து 44 மில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பது இருதரப்பு உறவின் முக்கிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் 17% கச்சா எண்ணெய் மற்றும் 32% எல்.பி.ஜி தேவைகளை சவுதி அரேபியாவே பூர்த்தி செய்கிறது.

மேலும் 40க்கும் மேற்பட்ட வாய்ப்புள்ள துறைகளை கண்டறியப்பட்டு அதில் சவுதி அரேபியா முதலீடு செய்ய இருப்பதாகவும், வருங்காலங்களில் இந்த முதலீட்டுன் அளவு பெருமளவில் அதிகரிக்கப்படும் என்றும் முகமது அல்சடி கூறினார்.

Tags : India ,Saudi Arabia ,Ambassador , India, Investment, Saudi Arabia
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்