×

உத்தரபிரதேசம், பீகாரில் கனமழை: 4 நாளில் 90 பேர் பலி... நாளை வரை பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

லக்னோ: உத்தரபிரதேசம், பீகாரில் கனமழை பெய்து வருவதால், கடந்த 4 நாட்களில் 90 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், பள்ளிகள் சில இடங்களிலும் மூடப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீகாரில், வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்வதால், பாட்னாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது.

பாட்னா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், இன்று காலை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. முதல்வர் நிதீஷ்குமார் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நிலைமையை மறுபரிசீலனை செய்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் இயல்பை விட பிரயாகராஜியில் 102.2 மிமீ மழையும், வாரணாசியில் 84.2 மிமீ மழையும் பெய்தது. லக்னோ, அமேதி, ஹார்டோய் மற்றும் வேறு சில மாவட்டங்களில், பலத்த மழை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நாளை வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் பெய்த கனமழையால் கடந்த 4 நாட்களில் 90 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Uttar Pradesh ,Bihar , Uttar Pradesh, Bihar, Heavy Rain, Weather Center
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...