×

புரட்டாசி எதிரொலி: இறைச்சி, மீன் விற்பனை சரிவு

சேலம்: புரட்டாசி எதிரொலியால் இறைச்சிக்கடையில் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமாளுக்கு படையலிடுவது வழக்கம். நடப்பாண்டு புரட்டாசி கடந்த 18ம் தேதி தொடங்கியது. அன்று முதல் இறைச்சிக்கடைகளில் விற்பனை சரிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி இறைச்சிக்கடையில் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் இறைச்சி விற்பனை சரியும்.

இந்த நிலையில், நடப்பாண்டு புரட்டாசி மாதம் தொடங்கி, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி வாடிக்கையாளர்களின் கூட்டம் இல்லாமல் இறைச்சி விற்பனை சரிந்துள்ளது. வழக்கமாக நடக்கும் வியாபாரத்தில் 60 சதவீதம் குறைந்துள்ளது. 10 ஆடுகள் விற்பனையாகும் கடையில் இரண்டு, மூன்று ஆடுகள் மட்டுமே வியாபாரம் நடந்தது. இதேபோல் கோழி இறைச்சி, மீன் விற்பனையும் சரிந்துள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் சிறிய கடைகளில் இரண்டு, மூன்று ஆடுகள் விற்பனையாகும். அந்த கடைகள் திறக்கப்படவில்லை.  இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Tags : Fantasies, meat, fish, sales decline
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை