×

இந்தோனேசியாவின் சேரம் தீவை தாக்கிய 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஜகர்தா: இந்தோனேசியாவின் சேரம் தீவை தாக்கிய 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில்  6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 6.46 மணியளவில் மாலுக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகவும் 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

Tags : earthquake ,Cheram Island ,Indonesia , Indonesia, earthquake, kills
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்