×

திருப்பதி பிரமோற்சவத்திற்கு பழநியில் இருந்து 7 டன் பூக்கள் அனுப்பி வைப்பு

பழநி:  திருப்பதி பிரமோற்சவத்திற்காக பழநியில் இருந்து 7 டன் பூக்கள் பஸ் மூலம் அனுப்பப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் சார்பில், திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு கடந்த 17 ஆண்டுகளாக பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நவராத்திரி பிரமோற்சவத்திற்காக 10  நாட்களுக்கு சுமார் 7 டன் பூக்கள் இவ்வமைப்பின் சார்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக நேற்று கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் தலைவர் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து தலைமை வகிக்க, செயலாளர் மருதசாமி முன்னிலை வகித்தார்.

  பழநி கோயில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி பூக்களை வழங்கி துவக்கி வைத்தார். மரிக்கொழுந்து, மேரி கோல்டு சிவப்பு மற்றும் வெள்ளை பூக்கள், விரிச்சி, சாமந்தி வகை பூக்கள் நாள்தோறும் 700 கிலோ வீதம் 10 நாட்களுக்கு  சுமார் 7 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. பூக்கள் வழங்குவது தொடர்பான தகவல்களுக்கு பக்தர்கள் 94434 03026 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாமென புஷ்ப கைங்கர்ய சபா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் பழநி கோயில் துணை ஆணையர் (பொ) செந்தில்குமார்,  கண்காணிப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Palani ,Tirupati Promotion Tirupati Promotion ,Seven Tons , Seven Tons of Flowers from Palani for Tirupati Promotion
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்