×

தவறான வாழ்க்கை முறையால் இந்தியர்கள் 30 வயதிலேயே இறக்கின்றனர்: மருத்துவ நிறுவன ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: தவறான வாழ்க்கை முறையால் 30 வயதிலேயே இந்தியர்கள் இறப்பை சந்திக்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரும் பலமே இளைஞர்கள்தான். இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணம் உலக அளவில்  இளைஞர் பட்டாளத்தை அதிகமாக கொண்டிருப்பதுதான். இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான ஹெல்தியன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 30 முதல் 44 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தவறான  வாழ்க்கைமுறைப் பழக்கங்களால் கொழுப்பு சேர்த்தல், உடல் பருமன், இதய நோய் என பலவகையான லைஃப்ஸ்டைல் நோய்களை சந்திப்பதாகவும், அதில் பெண்கள் 50 முதல் 59 வயதிற்கு அதுபோன்ற நோய்களை சந்திப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தை உண்டாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். தற்போதே 4 லட்சம் நோயாளிகளில் 2.25 லட்சம் ஆண்கள் இளைஞர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் பெண்கள் 1.75 சதவீதமாக  இருப்பதாகக் கூறுகிறது.

உலக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் படி உலகம் முழுவதும் 60 சதவீதம் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 44 சதவீதம் இளம் வயதில் இறந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது. அதில் பெரும்பாலானோர் இறப்பிற்குக் காரணம்  வாழ்க்கைமுறையின் தவறான பழக்கங்களே காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது.

எனவே இந்த இறப்பு விகிதத்தை குறைப்பதோ, ஆண்களுக்கான 30 வயதில் நோய் தாக்குதல் என்பதோ கட்டுப்படுத்த முடியாதது அல்ல. ஆண்கள் தங்கள் வாழ்க்கைமுறையில் நல்ல பழக்கங்களை இன்றிலிருந்தே துவங்குகள். சரியான நேரத்தில்  ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தூக்கம், உடல் உழைப்பு முக்கியமாக உடல் பரிசோதனை செய்தல் போன்ற பழக்கங்கள், இளமையில் அதாவது 30 வயதில் சந்திக்கும் இறப்பைத் தவிர்க்கலாம்  என்று ஹெல்தியன் இயக்குநரான  மருத்துவர் மஞ்சுளா சர்தனா அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Indians ,institution , Indians die at age 30 due to abusive lifestyle: trauma information in medical institution study
× RELATED வயது என்பது மனதிற்கே... சாதிக்க...