×

விஜய் ஹசாரே டிராபி தமிழகம் ஹாட்ரிக் வெற்றி

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரின் சி பிரிவில், தமிழக அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ஜெய்பூரியா வித்யாலயா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், தமிழகம் - பீகார் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த பீகார் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்தது. கேப்டன் பபுல் குமார் 110 ரன் (136 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), ரகமதுல்லா 38, கேஷவ் குமார் 35 ரன் விளாசினர். தமிழக அணி பந்துவீச்சில் முகமது 3 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய தமிழகம் 46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்து வென்றது. ஜெகதீசன் 24, முகுந்த் 37, ஹரி நிஷாந்த் 9 ரன்னில் வெளியேறினர். அபராஜித் 52 ரன் (66 பந்து, 1 பவுண்டரி), விஜய் ஷங்கர் 91 ரன்னுடன் (88 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த தமிழகம், 12 புள்ளிகளுடன் சி பிரிவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.


Tags : Vijay Hazare Trophy , Vijay Hazare Trophy
× RELATED விஜய் ஹசாரே டிராபி தமிழகம் 6வது வெற்றி