×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் : திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை தாக்கல்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 23ம் தேதி முதல் நாளை (30ம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் மொத்தம் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.நாங்குநேரியில் 12 பேரும், விக்கிரவாண்டியில்  6 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று (சனி), இன்று (ஞாயிறு) விடுமுறை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இதனால் நாளை (30ம் தேதி) ஒருநாள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியிலும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில், அதிமுக வேட்பாளர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதியிலும் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதிநாள் என்பதால் அரசியல் கட்சிகளுடன் சேர்த்து சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். நாளை மாலை 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடையும். இதையடுத்து, நாளை மறுதினம் (அக்.1ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ் வாங்க அக்டோபர் 3ம் தேதி மாலை 3 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைவதையொட்டி, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 3ம் தேதியில் இருந்து பிரசாரம் செய்கிறார். இரண்டு தொகுதியிலும் தலா 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tags : constituency ,Nikkuneri Vikravandi ,AIADMK ,Congress ,DMK , Tomorrow is the last day, nominations, Nikkuneri Vikravandi constituency
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...