×

வரும் 2100ல் 60 செமீ உயரும் அபாயம் கடல் மட்டம் உயர்வால் அந்தமான் நீரில் மூழ்கும் : பருவநிலை மாற்றம் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் அந்தமானில் எதிர்க்காலத்தில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மற்றும் பனிப்படலம் தொடர்பான பருவநிலை குறித்து சிறப்பு ஆய்வை அரசு அமைப்பு ஒன்று நடத்தியது. இதில் உயர்ந்து வரும் கடல்மட்டம் காரணமாக எதிர்க்காலத்தில் அந்தமான் நிக்கோபாரில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சல் பிரகாஷ் கூறியதாவது:

இந்தியாவில் கடலில் ஏற்படும் சூறாவளி போன்றவற்றால் பருவநிலை மாற்றம் ஏற்படும். குறிப்பாக கடல்மட்டம் உயர்வதால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை உருவாகும். இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் ெவளியேறுவார்கள். கடல் மட்டம் உயர்வு மற்றும் பனிப்பாறை உருகுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும். ஆண்டுக்கு 3.6 மிமீ அளவுக்கு உயர்ந்து வந்த கடல்மட்டம் தற்போது இருமடங்காக உயர்ந்துள்ளது. இது வரும் 2100ம் ஆண்டில் 60 செமீ அளவுக்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறையும். நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு காரணமாக வீட்டில் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பயிர் விளைச்சலும் பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : sea level rise ,Andaman ,Climate change study Andamans , Andamans ,submerged, rising sea level rises , 60 cm by 2100
× RELATED காரைக்குடி நகராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்