×

மண்டல டேபிள் டென்னிஸ் எம்ஓபி சாம்பியன்

சென்னை : மண்டலங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி எஸ்ஐவிஈடி கல்லூரியில் நடைபெற்றது. இதன் அரையிறுதி போட்டியில் ஏ மண்டலத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணியும்,  பி-மண்டல கல்லூரிகள் அணியும் மோதின. இந்த போட்டியில் எம்ஓபி கல்லூரி 3-0 என்ற நேர் செட்களில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதை தொடர்ந்து இறுதிப் போட்டியில் ஏ மண்டலத்தை சேர்ந்த எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி - எத்திராஜ் கல்லூரி அணிகள் மோதின. இதிலும் எம்ஓபி கல்லூரி 3-0 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற எம்ஓபி கல்லூரி வீராங்கனைகளை, முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

கபடியிலும் வெற்றி

பல்கலைக்கழக ஏ மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டி, துரைப்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடந்தது. போட்டியில் மொத்தம் 24 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியும், ராணி மேரி கல்லூரியும் மோதின. இதில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 39-36 என்ற புள்ளி கணக்கில் போராடி வென்றது. எஸ்ஐஈடி கல்லூரி 3வது இடத்தை பிடித்தது. இதுபோல், அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பேட்மின்டன் போட்டியில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி முதலிடத்தையும், பெண்கள் கிறித்துவ கல்லூரி 2வது இடத்தையும் பிடித்தன.

Tags : Regional Table Tennis, MOP Champion
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1