×

ஏரியில் மூழ்கி ஒரே வாரத்தில் 7 பேர் பலி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூர் அண்ணா நகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் திலீப்குமார்(14). இவர் 8ம் வகுப்பு மாணவன் மணிகண்டனுடன்(13), நேற்று மதியம் அங்குள்ள மண் குன்று மலை  ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழம் அதிகமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை, பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் 2 சிறுவர்களும், புதன்கிழமை 2 சிறுமிகளும், வியாழனன்று ஓசூர்  அட்கோவில் ஒரு சிறுமியும்  ஏரியில் மூழ்கி இறந்துள்ளனர்.Tags : lake , Drowned in the lake, 7 killed
× RELATED சிங்கப்பெருமாள்கோவில் அருகே ஏரியில்...