×

டாஸ்மாக் பார்களுக்கு நாளை டெண்டர்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் பார் டெண்டர் நடக்கிறது. இந்த டெண்டரின் மூலம் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரி  ஒருவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 1,872 மதுக்கூடங்கள் என்கிற பார்கள் செயல்படுகிறது. கடந்த ஆண்டு பார் டெண்டர் தொகை அதிகமாக இருந்ததால் ஏலம் எடுக்க பெரும்பாலோனோர் முனைப்பு காட்டவில்லை. இதனால் பார் உரிமை  தொகை குறைக்கப்பட்டது. இதையடுத்து, பார் டெண்டரில் அனைவரும் டெண்டரில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என பார் உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 11ம் தேதி டெண்டர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென பார் டெண்டரை நிர்வாகம் ஒத்திவைத்தது. பின்னர், இம்மாதம் 30ம் தேதிக்குள் டெண்டரை நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழகம்  முழுவதும் நாளை திட்டமிட்டபடி பார் டெண்டர் நடைபெறுகிறது.

ஏற்கனவே, பார் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று உரிமத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 90 சதவீத பார் உரிமையாளர்கள் பார் டெண்டரில் கலந்துகொள்ள உள்ளனர். தமிழகத்தில் அரசு அனுமதி பெற்று 1,872 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் டெண்டரில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  உரிமத்தொகை குறைக்கப்பட்டுள்ளதால்  அனைவரும் பார் டெண்டர் எடுக்க வாய்ப்புள்ளது. அதன்படி, தற்போது உள்ள பார்களின் எண்ணிக்கை விரைவில் 2 ஆயிரத்து 500ஐ தொடும் எனவும் அதிகாரி கூறினார்.

Tags : Tasmac Bar, Tender
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...