×

காரைக்குடி காப்பகத்தில் இருந்து டிக்-டாக் வினிதா தப்பி ஓட்டம்

தேவகோட்டை: காரைக்குடியில் உள்ள காப்பகத்தில் இருந்து டிக்-டாக் வினிதா தப்பி ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கடம்பாக்குடியை சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ மனைவி வினிதா(19). இவருக்கும் திருவாரூர் மாவட்டம், கிளரியம் போஸ்ட் அஸ்கான்ஓடையைச் சேர்ந்த டான்சரான அபிக்கும் டிக்-டாக் மூலம்  நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதை கணவர் கண்டித்ததால் வினிதா வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் போலீசில் சரணடைந்த அவரிடம் தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். கடந்த 25ம் தேதி இரவு வினிதா, இவரது கணவர் ஆரோக்கிய லியோ, தாய் ஆகியோரை அழைத்துக் கொண்டு தேவகோட்டை தாலுகா போலீசார், திருவாரூரில் உள்ள அபியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால், வினிதாவுடன்  27ம் தேதி அதிகாலை ஊருக்குத் திரும்பினர்.

காரைக்குடி புது பஸ் நிலையம் அருகே தாய், கணவரை இறக்கி விட்ட பின்னர், வினிதாவை காரைக்குடியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்து விட்டு திரும்பினர். ஆனால் சில மணி நேரத்தில் வினிதா சுவர் ஏறிக்குதித்து தப்பி விட்டதாக  காப்பக பொறுப்பாளர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வினிதாவை காணவில்லை என போலீசார் வழக்கு பதிந்து  அவரையும், அபி, மற்றொரு தோழி சரண்யாஆகியோரையும் தேடுகின்றனர்.

Tags : Tik-Tok Vinita , Karaikudi, Archive, Tik-Tok Vinita, Escape
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்கி...