×

மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு: 16 கண் மதகுகள் மூடல்

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை  17 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தொடர்ந்து அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான  நீர்வரத்தும் நேற்று காலை 19 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. டெல்டா பாசனத்திற்கு 27 ஆயிரம் கனஅடியில் இருந்து நீர்திறப்பு நேற்று 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. இதையடுத்து, உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது.


Tags : Mettur Dam Dam Reduction ,Mettur Dam Reduction , Mettur Dam, water opening reduction
× RELATED 11, 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய...