×

புரட்டாசி பனியால் மழைக்கு பஞ்சம்: நெற்பயிர்கள் வதங்குவதால் விவசாயிகள் அச்சம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புரட்டாசி பனி பொழிவதால் மழைக்கு பஞ்சம் ஏற்படும் என விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நெல் விதைத்துள்ளனர். பருவ மழை பெய்யாததால், ஒரு சில விவசாயிகளின் நெற்பயிர்கள் கருகியது. அதன் பிறகு பெய்த மழையால், நெற்பயிர் பசுமைக்கு திரும்பி உள்ளது.தற்போது கதிர் விடும் நேரத்தில் நெற்பயிர்கள் இருப்பதால், பருவ மழை அதற்கேற்றாற்போல் பெய்யவில்லை.

அதற்கு மாறாக, பனி பெய்வதால் மழை குறைவாக இருக்கும் என விவசாயிகள் அஞ்சி வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் மப்பேடு, பேரம்பாக்கம் உட்பட பல கிராமங்களில் நெற்பயிர்கள் வதங்கி வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘புரட்டாசி மாதம் பொன் உருக வெயில் காயும். இரவில் மண் உருக மழை பெய்யும்’ என்ற பழமொழி உண்டு. ஆனால், வெயில் மட்டும் காய்கிறது. இதனால், நீரின்றி நெற்பயிர் வதங்கும் நிலை உள்ளது’ என்றனர்.

Tags : Famine , Frosty snow, rain, rice paddies
× RELATED அதிகரித்து வரும் கொரோனா தொற்று...