×

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு... அக்.1-ம் தேதியில் இருந்து விசாரணை

டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு தகுதி தரும் 370-வது பிரிவை நீக்கியதை எதிர்த்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 1 முதல் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்  காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இருதினங்களுக்கு முன்புதான், பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனால், அவர் வசிக்கும் வீடே சிறையாக மாற்றப்பட்டு, அவர் அடைக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல், மாநிலம் முழுவதும்  பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதை எதிர்த்து  தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபத் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரமணா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.காண்ட், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் மாதம் 1-ம் தேதியில் இருந்து இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : removal ,Kashmir ,judges session ,judges ,session , Special status of Kashmir, 5 judges session
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!