×

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம்: பேராசிரியர்கள் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் மீது கல்லூரி முதல்வர் போலீசில் புகார்

கண்டமனூர்: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க கூடிய உதித் சூர்யா வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. உதித் சூர்யாவுக்கு உதவியதாக 2 பேராசிரியர்கள் மீது மருத்துவக் கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ மாணவர் உதித் சூர்யா முறைகேடு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய திருப்பமாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் ஆள்மாறட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா,

அவருக்கு உதவியாக கல்லூரி பேராசிரியர்கள் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவரும் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்திருப்பதாக முதல்வர் அளித்த புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து கண்டமனூர் விலக்கு காவல்துறையினர் விசாரணை ,மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் அடைப்படையில் பல புதிய புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதேபோன்று வேறு மாணவர்கள் யாரும் சேர்ந்திருக்கிறார்களா?, அவர்களுக்கு வேறு யாரும் உதவி செய்தார்களா?, என்பது குறித்து தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.


Tags : Velmurugan ,scandal ,Thiruvenkadam , NEED Examination Abuse, Professors, College Principal, Complainant
× RELATED சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு