×

சேறும் சகதியுமான மயான சாலையில் சடலத்தை எடுத்து செல்லும் அவலம்: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி: மகாதேவபட்டினம் கிராமத்தில் உள்ள முக்கரை மயானத்திற்கு செல்லும் மண் சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் மழையால் மண் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி கிடப்ப தால் சடலங்களை எடுத்து செல்வதில் சிரமமாக உள்ளதால் சாலையை உட னடியாக சீரமைத்து தருமாறு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மகாதேவபட்டிணம் கிராமத்தில் ஒரு பகுதியில் வசிக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பாட்டிற்காக மகாதேவபட்டினம் கீழநெம்மேலி இணைப்பு சாலையில் ஏரிக்கரை அருகே முக்கரை மயானம் உள்ளது. இர ண்டு பக்கமும் வயல்கள் சூழ்ந்த நிலையில் அமைந்துள்ள அந்த சுடுகாட் டிற்கு சடலங்களை எடுத்து செல்வதற்கு ஏரிக்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு 12 அடி அகலத்திற்கு மண் சாலை உள்ளது. சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மண் சாலையாக இருப்பதால் மழைக் கால ங்களில் சடலங்களை எடுத்து செல்வதில் சிரமங்கள் இருப்பதால் அந்த சாலையை மேம்படுத்தி அதனை தார் அல்லது சிமென்ட் சாலையாக சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்தும் நிறைவேற்றப்பட வில்லை.

.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாதேவபட்டினம் கிராமத் தை சேர்ந்த புஷ்பவள்ளி என்ற பெண் இறந்து விட்டார். சுடுகாட்டிற்கு செல் லும் மண் சாலை மழை காரணமாக சேறும் சகதியுமாக கிடந்ததால் அவ ரின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதில் சிக்கல் எழுந்தது. சடலத் தை தூக்கி சென்ற போது சிலர் சேற்றில் வழுக்கி விழுந்துள்ளனர்.மேலும் முக்கரை சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்வதற்கு தண்ணீர் வசதி யும் இல்லை. அருகில் உள்ள குளங்களில் தண்ணீர் இருக்கும் போது அதனை பயன்படுத்தி வந்த மக்கள் மற்ற நேரங்களில் தண்ணீருக்காக நீண்ட தொ லைவு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முக்கரை மயானம் மற்றும் அதற்கு செல் லும் மண்சாலை ஆகியவற்றை நேரில் வந்து பார்வையிட்டு ஏற்கனவே சேதமடைந்து கிடக்கும் மண்சாலையை மேம்படுத்தி புதிதாக தார் அல்லது சிமெண்ட் சாலையாக போட்டு தரவும், மயானத்தில் இறுதி சடங்கு செய் வதற்கு ஏதுவாக அடி பம்ப் ஒன்றை அமைத்து தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Mannargudi , Mannargudi, corpse, take, carry, woe
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...