×

ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் 15 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

புதுடெல்லி:  ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி சிபிஐ பொறியில் சிக்கிய மத்திய நேரடி வரி வாரியத்தை(சிபிடிடி) சேர்ந்த மேலும் 15 மூத்த  அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, சில கருப்பு ஆடுகள் வரி நிர்வாகத்தில் தங்களது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். வரி செலுத்துவோரை துன்புறுத்தியிருக்கலாம். அதாவது நேர்மையாக வரிசெலுத்துவோரை குறிவைத்து சிறிய அல்லது அதிக நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவோ துன்புறுத்தி  இருக்கலாம். எனவே இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டமாட்டோம் என தெரிவித்து இருந்தார்.

 அதற்கேற்ப ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி சிபிஐ பொறியில் சிக்கிய  சில அதிகாரிகள் ஏற்கனவே கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதுபோன்று இதுவரை மூன்று முறை அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று 4வது பட்டியல் ஒன்றும் வெளியானது. இதில் 15 மூத்த அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனு்பப்பட்டனர்.  இதன்படி,  ஓ பி மீனா, ப்ரா. சிஐடி,   சைலேந்திர மாமிதி, சிஐடி,   பி.கே.பாலாஜி சிஐடி, சஞ்சீவ் கெய், ஜேசிஐடி, கே ஜெயபிராகஷ், ஏசிஐடி, அப்பாலா ராஜூ, கூடுதல் சிஐடி, ராகேஷ் எச். சர்மா, ஏசிஐடி, நித்தின் கர்க், டிசிஐடி, பசுலுல்லா, டிசிஐடி, கிரிபா சாகர்தாஸ், டிசிஐடி, ஜோஸ் குஞ்சு பல்லு, ஏசிஐடி, சிஜே வின்சென்ட், ஏசிஐடி, பட்டாச்சார்யா, டிசிஐடி, கமலேஷ் குமார் திரிபாதி, ஜேசிஐடி, எஸ் ஆர் சேனாபட்டி, கூடுதல் சிஐடி உள்ளிட்ட 15 பேரும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர்.


Tags : retirement , Corruption charges, senior officers, forced retirement
× RELATED வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்