×

குரூப் 2 தேர்வு பாடதிட்டம் மாற்றம் : டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை : குரூப் 2 தேர்வின் பாடம் திட்டம் மாற்றப்பட்டது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுநாள் வரை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதனிலை தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தெரிவாக முடியும். அதாவது தமிழ் தெரியாதவர்கள் கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது.

அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதனிலைத் தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மைத் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Group 2 Selection Curriculum Change: DNBSC Description , Group 2 ,Curriculum Change, TNPSC Interpretation
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...