×

நாங்குநேரி தொகுதியின் காங். வேட்பாளர் ரூபி மனோகரன்

நெல்லை : நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளூர் மற்றும் வெளியூர் பிரமுகர்கள் சீட் கேட்ட நிலையில், ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் வருகிற அக்.21ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கமிட்டி நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்களை சத்தியமூர்த்தி பவனில் பெற்றனர். காங்., மூத்த தலைவர் குமரிஅனந்தன், இளைஞர் காங்., பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், ஓபிசி அணி மாநில நிர்வாகி வக்கீல் காமராஜ், மாவட்ட தலைவர்கள் எஸ்கேஎம்.சிவகுமார், சங்கரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ வேல்துரை, அவரது மகன் வி.பி.துரை, முன்னாள் மாவட்ட தலைவர்கள் மோகன் குமாரராஜா, தமிழ்செல்வன் என 26 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்தனர்.

தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்., தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். நேர்காணலில் கட்சிக்கு உழைத்த விதம், போராட்டங்களில் பங்கேற்பு உள்ளிட்ட அம்சங்கள் இயல்பாகவே கேட்டறியப்பட்டன.  எங்களால் ஏதோ செலவழிக்க முடியும் என்கிற மாதிரி பதில்கள் இருந்தன. இறுதியாக 2 பேர் கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இறுதியில் ரூபி மனோகர் வேட்பாளராக தேர்வானார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையை சேர்ந்தவர். சென்னையில் ரூபி பில்டர்ஸ் என்னும் பெயரில் கட்டுமான தொழில் நடத்தி வருகிறார்.

தற்போது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரது மனைவி ரூபி இல்லத்தரசி. மகன் அசோக் ஆர்கி டெக்ட் முடித்துவிட்டு, கட்டுமான தொழிலில் தந்தைக்கு உதவியாக உள்ளார். சென்னை ரூபி பில்டர்ஸ் கட்டுமான குழுவின் துணை சேர்மனாகவும் உள்ளார். மகள் சிந்தியா மருத்துவ துறையில் எம்.டி முடித்துவிட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.



Tags : constituency ,Nankuneri ,candidate ,Ruby Manoharan ,Congress ,Nanguneri , Ruby Manoharan, Congress candidate, Nanguneri constituency
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...