×

விமானத்தில் நின்று ‘டாட்டா’ மோடி புகைப்படத்துடன் சுற்றுலா தின வாழ்த்து: காங்கிரஸ் கிண்டல்

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் நேற்று தனது டிவிட்டரில், கிண்டலாக வாழ்த்து தெரிவித்தது. அதில், ஏர் இந்தியா விமானத்தில் பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு புறப்படும் முன்பாக ‘டாட்டா’ காட்டும் 18 புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து, அதன் தலைப்பில் ‘உலக சுற்றுலா தினம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இது டிவிட்டரில் வைரலானது. கடந்த 2014 மே மாதம் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை 92 பயணமாக 57 நாடுகளுக்கு சென்றுள்ளார். இது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 5 ஆண்டு  ஆட்சியில் சென்ற பயணத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

Tags : Congress ,Tata Modi ,President ,Tata Motors , Aviation, Tata, Modi, Tourism Day Greetings, Congress
× RELATED சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற...