×

மான் வேட்டை வழக்கில் மேல்முறையீடு சல்மான்கான் மனு விசாரணைக்கு ஏற்பு

ஜோத்பூர்:  மான் வேட்டையாடிய வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நடிகர் சல்மான்கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஜோத்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள கங்கானி என்னும் இடத்தில் அரிய வகை மானை கடந்த 1998ம் ஆண்டு வேட்டையாடியதாக பிரபல நடிகர் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில், கீழ் நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து  ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை  ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது.  

கடந்தாண்டு மே மாதம் ஜாமீன் பெற்றதில் இருந்து அவர் நீதிமன்றத்தின் முன்  ஆஜராகவில்லை. கடந்த ஜூலை 4ம் தேதி வழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்ற  நீதிபதி சந்திர குமார் சோங்கரா, ‘சல்மான் கான் செப்டம்பர் 27ம் தேதி  விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் இல்லையென்றால், அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்,’ என எச்சரித்தார். எனினும், சல்மான் நேற்று பிற்பகல் வரை நீதிமன்றத்தில் ஆஜராக வரவில்லை.

Tags : Salman Khan , Deer Hunting, Appeal, Salmangan
× RELATED சூரத் ஆற்றில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் சிக்கின..!!