×

சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் இருந்துதான் இந்திய வரலாறு துவங்கப்பட வேண்டும் என்பதை கீழடி உறுதி செய்திருக்கிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவில் இந்து மத காவலர்களாக அடையாளம் தரித்துக்கொண்டு, இலங்கை இந்து ஆலய வளாகத்தில் பவுத்த பிக்குவின் உடலை எரித்ததை வேடிக்கை பார்ப்பது பாஜவின் இரட்டை வேடம். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தேர்தல் வரவு -செலவு தொடர்பாக வேண்டுமென்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின், நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை எதிர்த்து தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்.


Tags : MK Stalin ,DMK , DMK leader, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...