×

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கியவரின் குளிர்பான கடையை பொதுமக்கள் சூறை: புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கியவரின் குளிர்பான கடையை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் குளிர்பான கடை  நடத்தி வந்தவர் முகமது அலி (38). இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, கடந்த சில மாதங்களுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுபற்றி உனது வீட்டில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால்  அந்த சிறுமி பெற்றோரிடம் கூறாமல் மறைத்துள்ளார்.  இந்நிலையில், சிறுமி தனக்கு  அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக   தந்தையிடம் கூறியுள்ளார்.  சிறுமிக்கு உடலில்  மாற்றம் ஏற்பட்டதை அறிந்த  தந்தை,   சிறுமியை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த   மருத்துவர்கள் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக  தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த அவளது தந்தை, இதுபற்றி விசாரித்தபோது, குளிர்பான கடை  நடத்தி வரும் முகமது அலி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுபற்றி சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  
போலீசார் வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ், முகமது அலியை கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கர்ப்பமான சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், குளிர்பான கடைக்காரர் முகமது அலி, தனது கடைக்கு வரும் பல சிறுமிகளுக்கு இதேபோல் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முகமதுஅலி நடத்தி வந்த குளிர்பான கடையை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசாரிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று திரண்டு அந்த கடையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த டேபிள், சேர்கள் எல்லாவற்றையும் உடைத்து வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்க,ள் முகமது அலி நடத்தி வரும் கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர் இதையடுத்து அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : shoplifting ,Puduvannarapet Karppamakkiyavar ,Storm , Mental, Girl, Pregnant, General, Puduvannarapet
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு