×

தாய்லாந்து கடத்த முயன்ற 15 லட்சம் கடல் குதிரைகள் பறிமுதல்

தண்டையார்பேட்டை: பாரிமுனையில் கடல் குதிரைகள்  பதுக்கி வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட உள்ளதாக, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் தனிப்படை போலீசார், மேற்கண்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் பரூக் (53) என்பவரது வீட்டில் சோதனையிட்டபோது, 4 மூட்டைகளில் 75 கிலோ எடையுள்ள கடல் குதிரைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.

இதன் மதிப்பு 15 லட்சம். விசாரணையில், தனது நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த மொய்தீன் என்பவர் அனுப்பி வைத்தது என்றும், இவற்றை தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்து 75 கிலோ கடல்  குதிரைகளை பறிமுதல் செய்து, பரூக்கையும் பிடித்து தேனாம்பேட்டை வனச்சரக அதிகாரி மோகனிடம் ஒப்படைத்தனர்.



Tags : Thailand , Thailand, smuggling, sea horses
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...