2019-20ம் ஆண்டிற்கான தொழில் வரி செலுத்த 30ம் தேதி கடைசி: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை  மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில பிற அரசுத்துறை சார்ந்த அலுவலர், பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை  தொழில் வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி சட்ட விதி  வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2019-20 நிதியாண்டிற்கான முதலாம் அரையாண்டு தொழில் வரியை பின்வரும் அட்டவணையின்படி  செலுத்த வேண்டும். முதலாம் அரையாண்டின் தொழில் வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.    தவறும் பட்சத்தில்  சென்னை மாநகராட்சி சட்ட விதிபடி அபராதம், வட்டி தொகை கணக்கீடு செய்து  வசூலிக்கப்படும். சென்னை மாநகராட்சியின், அடிப்படை வசதிகளான  சாலை வசதி,  தெரு விளக்குகள், குப்பை அகற்றுதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்திட  மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்த வேண்டும்

Related Stories: