×

ஐநா.வில் முதல் முறையாக பேசிய குஷி செல்பி எடுத்து மகிழ்ந்த எல் சல்வடார் அதிபர்

நியூயார்க்: சமூக இணையதளம் மூலம் பிரபலமாகி எல் சல்வடார் நாட்டின் அதிபரான நயீப் புகேல், ஐநா பொது சபை கூட்டத்தில் நேற்று முதன் முதலாக பேசவந்த போது, மேடையில் நின்றபடி மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். எல் சல்வடார் நாட்டின் அதிபர் நயீப் புகேல். தொழில் அதிபர் மற்றும் எல் சல்வடார் தலைநகர் சான் சல்வடாரின் முன்னாள் மேயரான இவர் தன்னை விளம்பரபடுத்தி கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். டிவிட்டர் சமூக இணையதளத்தில் இவரை 11 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சமூக இணையதளத்தில் இவர் பிரபலம் அடைந்தது, அதிபர் தேர்தலில் இவர் வெற்றி பெற பெரிதும் உதவியாக இருந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர். இங்கு நேற்று முதன் முதலாக உரையாற்ற நயீப் புகேல் வந்திருந்தார்.

ஐ.நா சபையில் மேடை ஏறியதும், உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அரங்கத்தில் அமர்ந்திருக்கும் தனது மனைவி மற்றும் குழந்தைக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவதாக கூறினார். பின்னர் உலக தலைவர்களிடம் சில நொடிகள் பொறுத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தனது சட்டை பையில் இருந்து அதிநவீன செல்போனை எடுத்து, ஐ.நா சபை மேடையில் இருந்தபடியே செல்பி எடுத்தார். இதை பார்த்து உலகத் தலைவர்கள் புன்னகை செய்தனர். அதன்பின் அவர் பேசுகையில், ‘‘நான் இந்த அவையில் பேசும் பேச்சைவிட, இஸ்ன்டாகிராமில் நான் பகிர்ந்து கொள்ளும் சில படங்கள்தான் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்,’’ என்றார். உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும் எனவும் இவர் வேண்டுகோள் விடுத்தார்.

தனது உரையை முடித்தபின் பேட்டியளித்த நயீப், ‘‘நான் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஜோக் அடித்ததை சிலர் கிண்டல் செய்துள்ளனர். நான் அவருடன் சண்டையிட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்களா? நாங்கள் எங்களின் நட்பு நாடான அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் நபர்களை கைது செய்து பணம் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம்,’’ என்றார்.


Tags : time ,UN Khushi ,UN , UN, Khushi Chelbi, President of El Salvador
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...