×

சுவீடன் கப்பலை விடுவித்தது ஈரான்

டெஹ்ரான்: பிரிட்டன் கொடியுடன் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கப்பலை ஈரான் நேற்று விடுவித்தது. பிரிட்டன் தனது கட்டுப்பாடடில் உள்ள ஜிப்ரால்டர் வளைகுடா பகுதியில் சென்ற ஈரான் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்தது. இதற்கு பதிலடியாக கடந்த ஜூலை 19ம் தேதி பிரிட்டன் கொடியுடன் ஹர்மோஸ் கால்வாய் பகுதியில் சென்ற த ஸ்டீனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவம் சிறை பிடித்தது.  இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின் நேற்று இந்த கப்பலை ஈரான் நேற்று விடுவித்தது. முன்னதாக, இந்த கப்பல் ஊழியர்கள் 23 பேரில் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, சுவீடன் நாட்டுக்கு சொந்தமான இந்த கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து துபாய் நோக்கி  நேற்று காலை புறப்பட்டு சென்றது.

Tags : Sweden ,Iran , Iran , Sweden's ship
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்