×

மாருதி பலேனோ ஆர்எஸ் விலை 1 லட்சம் குறைப்பு

புதுடெல்லி: மாருதி பலேனோ ஆர்எஸ் விலை 1 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும்,ஆட்டோமொபைல் துறையில் விற்பனையை துரிதப்படுத்தவும் ஆல்ட்டோ 800, ஆல்ட்டோ K10, ஸ்விப்ட் டீசல், பலெனோ டீசல், இக்னீஸ், டிசையர் டீசல், டூர் S டீசல், விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் S-கிராஸ் ஆகியவற்றுக்கு விலை, ஷோரூம் விலையில் 5,000 குறைக்கப்பட்டது. இந்நிலையில், மாருதி நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் மாடலான பலேனோ ஆர்எஸ் விலையை ஷோரூம் விலையில் 1 லட்சம் குறைத்து அறிவித்துள்ளது. இதன்படி இந்த காரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை 7,88,913ல் தொடங்குகிறது.

Tags : Maruti Baleno ,RS , Maruti Baleno RS
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...