×

கொரியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் காஷ்யப்

இன்ச்சியான்: கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றார். கால் இறுதியில் டென்மார்க் வீரர் ஜான் ஓ ஜார்கன்சனுடன் நேற்று மோதிய காஷ்யப், கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 24-22 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் அடுத்த செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த அவர் 24-22, 21-8 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 37 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. காஷ்யப், அரை இறுதியில் இன்று முன்னாள் நம்பர் 1 வீரரும் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவை எதிர்கொள்கிறார்.


Tags : Kashyap ,end ,badminton half ,Korea Open , Korea Open Badminton, Kashyap
× RELATED திரையரங்கில் தான் தளபதியின் மாஸ்டர்;...