×

தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் பைனலில் சொரானா சிர்ஸ்டீ

தாஷ்கன்ட்: உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ரோமானிய வீராங்கனை சொரானா சிர்ஸ்டீ தகுதி பெற்றார். அரை இறுதியில் கடாரினா ஸவட்ஸ்காவுடன் (உக்ரைன்) நேற்று மோதிய சிர்ஸ்டீ 6-0, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 14 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. 2008ல் 18 வயது இளம் வீராங்கனையாக தாஷ்கன்ட் ஓபன் பட்டத்தை வென்ற சிர்ஸ்டீ, கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு டபுள்யு.டி.ஏ டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரை இறுதியில் பெல்ஜியம் வீராங்கனை அலிசான் வான், செக் குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் சிர்ஸ்டீ - அலிசான் வான் மோதுகின்றனர். வுஹான் ஓபன்: சீனாவில் நடைபெறும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட அரினா சபலென்கா (பெலாரஸ்), அலிசான் ரிஸ்கி (அமெரிக்கா) தகுதி பெற்றுள்ளனர். அரை இறுதியில் அலிசான் ரிஸ்கி 7-5, 7-5 என்ற நேர் செட்களில் பெத்ரா குவித்தோவாவையும் (செக் குடியரசு), சபலென்கா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ஆஷ்லி பார்தியையும் (ஆஸ்திரேலியா) வீழ்த்தினர்.

Tags : Sorana Sirstee ,Tashkent Open Tennis Final , Tashkent Open Tennis, Sorana Sirstee
× RELATED ஆர்மீனியாவில் கால்பந்து விளையாட்டில்...