சில்லி பாயின்ட்...

* இந்திய அணி நிர்வாகம் ஆதரவளித்து இருந்தால் இன்னொரு உலக கோப்பை தொடரில் விளையாடி இருப்பேன்’ என்று ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

* டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்க அணி முன்னாள் ஆல் ரவுண்டர் லேன்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இந்திய அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நட்சத்திர வீராங்கனை சாரா டெய்லர் (30 வயது) மன அழுத்தம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* பாகிஸ்தான் - இலங்கை அணிகளிடையே கராச்சியில் நேற்று நடக்க இருந்த முதல் ஒருநாள் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது. 2வது போட்டி 29ம் தேதிக்கு பதிலாக 30ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>