×

80 ஆண்டுகளுக்கு முன் காந்தி எழுதிய கடிதம்: இஸ்ரேல் அரசு வெளியிட்டது

ஜெருசலம்: கடந்த 80 ஆண்டுகளுக்கு முன், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய தினத்தில், யூதத் தலைவருக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதத்தை இஸ்ரேல் அரசு முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது, இந்திய தலைவர்களுக்கு பம்பாய் சியோனிஸ்ட் அசோசியேஷன் தலைவராக இருந்த யூத தலைவர் ஷோஹெட் ஆதரவு தெரிவித்து வந்தார். இதனால், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் ஷோஹெட்டுக்கு நட்பு நிலவிவந்தது. கடந்த 1939ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி யூதர்களின் புத்தாண்டையொட்டி, காந்தி, ஷோஹெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

அன்று தான் இரண்டாம் உலகப் போரும் ஆரம்பமாகி இருந்தது. அதை தனது கடிதத்தில் குறிப்பிட்ட காந்தி, ‘அன்புள்ள ஷோஹெட்டுக்கு, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு, பாதிக்கப்பட்ட உங்கள் மக்களின் அமைதி, புதிய சகாப்தமாக மாற வாழ்த்துகிறேன்,’ என்று கூறியுள்ளார். 80 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கடிதத்தை முதல் முறையாக இஸ்ரேலின் தேசிய நூலகம் நேற்று வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடும் வேளையில் இக்கடிதம் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Gandhi ,State of Israel ,The State of Israel , Gandhi, Letter, Government of Israel
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!