×

ஓமன் கடல் பகுதியில் புயல் குமரி மீனவர் உள்பட 11 பேர் நடுக்கடலில் மாயம்

நாகர்கோவில்,செப்.28: குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த சிலுவை தாசன், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாழையை சேர்ந்த கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன், காசிலிங்கம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சார்ந்த ஆறு மீனவர்கள் உட்பட 11 மீனவர்கள் ஓமன் நாட்டில் அப்துல் ஹமீது என்ற அரேபியருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். கடந்த  17ம் தேதி 11 மீனவர்கள்  ஓமன் நாட்டில் மீன்பிடிக்க சென்றனர்.  கடந்த 23ம் தேதி ஓமன் கடல் பகுதியில் ஏற்பட்ட புயலில் மீனவர்களின் விசைப்படகு சிக்கிக் கொண்டுள்ளது. அந்த புயலில் 11 மீனவர்களும் படகுடன் மாயமாகி உள்ளார்கள்.


Tags : Oman Sea ,fisherman ,Storm Kumari ,Mediterranean Sea , Eleven people,Oman Sea,
× RELATED ராமேஸ்வரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை