×

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உடல் நலிவுற்று காரைக்குடி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, உடல் நலம் விசாரித்து, நலம் அறிந்தார். மேலும் உடல்நலம் விரைந்து தேறிட, அடிகளாருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Tags : MK Stalin ,Kundakkudi Ponnambala Adikaliyar , MK Stalin inquired, Kundakkudi Ponnambala Adikaliyar
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...