×

ஏழை மக்களுக்கு 2023க்குள் கான்கிரீட் வீடுகள் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: ஏழை மக்களுக்கு 2023க்குள் முழுமையாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளீஸ்வரன் தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.அப்பகுதி மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்து உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. 200 சதுர அடி உள்ள வீடுகளை இடித்து 400 சதுர அடி வீடுகளாக கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஒரு மாத காலத்துக்குள் தற்போது உள்ள குடியிருப்புகள் இடிக்கப்படும். புதிய வீடுகள் கட்ட ₹69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வீடுகள் ஓராண்டிற்குள் கட்டித்தரப்படும்.

பொதுமக்கள் வெளியில் தங்கியிருக்கும் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு மாதம் 8000 ரூபாய் வழங்கப்படும். ஒரு மாதத்திற்குள் வீடுகள் இடிக்கப்பட்டு இங்குள்ள மக்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மூலம் 2023 தொலைநோக்கு திட்டத்தின்படி 75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிசைப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை 6 லட்சம் புதிய தரமான கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. அனைத்து ஏழை மக்களுக்கும் 2023க்குள் கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டு விடும்.
இவ்வாறு கூறினார்.

Tags : houses ,concrete houses ,O. Panneerselvam. , Concrete houses,poor people by 2023
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்