×

பூடான் நாட்டில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு

பூன்ப்ஹூலா: பூடான் நாட்டில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் இந்திய ராணுவ விமானியும், பூடான் ராணுவ விமானியும் உயிரிழந்தனர். பூடான் ராணுவ விமானிக்கு இந்திய ராணுவ விமானி பயிற்சி அளித்தபோது ஹெலிகாப்டர் கீழே விழுந்தது.

பூடான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்றில், பூடான் ராணுவ விமானிக்கு, இந்திய ராணுவ விமானி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். பயிற்சியின் போது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ராணுவ ஹெலிகாப்டரோ அல்லது விமானமோ விபத்தில் சிக்குவது போல் இருந்தால், விமானிகள் பாராசூட் மூலம் தப்பித்துவிடுவார்கள். விமானம் மட்டும் விபத்தில் சிக்கும். ஆனால், இங்கு இரு விமானிகளுமே பலியாகி இருப்பது ராணுவ அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து இந்திய அதிகாரிகளும், பூடான் அதிகாரிகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பூடானின் பூன்ப்ஹூலா உள்நாட்டு விமான நிலையம் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோசமான வானிலை காரணமாக இவ்விபத்து நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Indian Army ,helicopter crash ,pilots ,accident ,Bhutan Bhutan , Bhutan, helicopter, accident
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...