×

சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் செங்கல்பட்டு, அரக்கோணம், தாம்பரம் ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து வரும் 29ம் தேதி காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 ஆகிய நேரங்களில் தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரத்தில் இருந்து காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, 12, 12.15, 12.45, 1,30, 1.45, 2.15, 2.30, 3, 3.10 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம், திருமால்பூர் இடையே 29ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1.50 மணி வரை இயக்கப்படும் 15 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு 29ம் தேதி காலை 10.55, 11.30, 12.20, 1, 1.50 மணிக்கும், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே காலை 9.15 மணிக்கும், திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 11.10, 11.45, 12.25, 1.35, 2, 2.35 மணிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.30 மணி தாம்பரத்திற்கும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.55 மணிக்கு அரக்கோணத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு  இடையே இன்றும், நாளையும் காலை 10.08, 10.56, 11.48 மணிக்கு இயக்கப்படும்  ரயில்கள் காட்டாங்கொளத்துர்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்றும், நாளையும் காலை  11.30, 12.20, 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் காட்டாங்கொளத்தூர்-  செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-  செங்கல்பட்டு இடையே 29ம் தேதி காலை 11, 11.50 மணிக்கு இயக்கப்படும்  ரயில்கள் காட்டாங்கொளத்தூர்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 29ம் தேதி காலை 11.30, 12.20, 1  மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு- காட்டாங்கொளத்தூர் இடையே  ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே  இன்று, நாளை மற்றும் 29ம் தேதி காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள்  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 45 நிமிடம் நின்று புறப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Tambaram ,Arakkonam ,Chengalpattu ,Chennai ,coast , Chennai, Chengalpattu, Arakkonam, Tambaram, Trains
× RELATED அரக்கோணம் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை