வருசநாடு அருகே சாலை வசதியில்லாத மலைக்கிராம மக்கள்

*கலெக்டர் கவனிப்பாரா?

வருசநாடு : வருசநாடு அருகே தார்ச்சாலை இல்லாமல் மலைக்கிராம மக்கள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்டு காந்திகிராமம், முத்துநகர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. தும்மக்குண்டுவிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இந்த கிராமங்கள் உள்ளன. தும்மக்குண்டுவிலிருந்து காந்திகிராமம், முத்துநகர் ஆகிய கிராமங்களுக்கு செல்ல தார்ச்சாலை வசதியில்லை.

இதனால் காந்திகிராமம், முத்துநகர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தும்மக்குண்டுவுக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படாததால் கரடு, முரடான சாலைகளில் டூவீலர் ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கின்றனர். இதுதொடர்பாக கிராமசபை கூட்டங்கள் மற்றும் கலெக்டரிடம் பலமுறை கிராமமக்கள் புகார் அளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, காந்திகிராமம், முத்துநகர் கிராமமக்கள் நலன் கருதி தும்மக்குண்டு-காந்திகிராமம், முத்துநகர் இடையே தார்ச்சாலை அமைக்க, தேனி  மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hill people ,Varusanad ,Peoples ,facility ,Varusanaadu , Varusanaadu ,basic facility,Peoples,
× RELATED வருசநாடு அருகே பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க கோரி முற்றுகை