×

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் கேமரா பொருத்த கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 98 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த கல்லூரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி மட்டுமல்லாது, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம், மண்டல அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிசிடிவி பொருத்துவது பற்றி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை செய்து அக்டோபர் 8ம் தேதிக்குள் அறிக்கை தர கல்லூரி கல்வி இயக்கங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Colleges of Education ,Science Colleges ,Tamil Nadu ,College of Arts and Sciences , Tamil Nadu, Government Arts, Science College, Camera, College Education Director directive
× RELATED புதிய இயக்குநர் நியமனம்