×

கரும்புகையை கக்கிக்கொண்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்கள்

தொண்டி :  கரும்புகையை வாகனங்கள் கக்கி கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் வட்டார போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, திருவாடானை, முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், சத்திரக்குடி பகுதிகளில் டூவிலர், நான்கு சக்கர வாகனங்கள் ஏராளமாக உள்ளன. ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கில் செல்கின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகையை கக்கி செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் புதிய வாகனங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பரிசோதனை செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஆனால் பழைய வாகனங்கள் சரியாக பராமரிக்கால், யை கக்கியவாறு செல்கின்றன. இதை கட்டுப்படுத்தவே அரசு புகை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. பழைய வாகனங்களான லாரிகள், சரக்கு வாகனங்கள், வாடகை வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆண்டிற்கு ஒரு முறை தகுதி சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லும் போது, புகை பரிசோதனை செய்ய வேண்டும்.

அரசு பஸ்களிலே பெரும்பாலும்  இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறுகின்றனர். தினந்தோறும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் யை கக்குவதால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்களும் நடக்கின்றன. அதனால் அவ்வப்போது வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Ramnad District , Vehicles ,Dark smoke ,ramna District, thondi
× RELATED பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில்...