×

ஹேப்பி பர்த்டே கூகுள்!! : 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கூகுளின் வெற்றி பயணம்....... சிறப்பு டூடுல் வெளியீடு

கலிபோர்னியா: உலகின் முதன்மையான தேடுதல் எஞ்சினாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 21வது பிறந்த நாள் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருகின்றது. செப்டம்பர்  15, 1997 அன்று google.com என்கிற டொமைன் பதிவு செய்யப்பட்டது, கூகுள் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட வருடம் செப்டம்பர் 4, 1998-ம் ஆண்டு. இதில் எதை பிறந்த நாளாகக் கொண்டாடுவது?. இந்தக் குழப்பத்தின் காரணமாகவே 2003-ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி, 2004-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 26 என வெவ்வேறு நாட்களில் பிறந்தநாள் கொண்டாடியது கூகுள்.

அதன்பிறகு ஒரு முடிவெடுத்து 2006-ல் இருந்து செப்டம்பர் 27-ம் தேதியை தன் பிறந்தநாளாக கொண்டாடி வருகிறது.  கூகுள் இணையதள தேடுதலின் மஹாராஜா என்றால் மிகையல்ல, சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160க்கு மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணி தேடுபொறியை உருவாக்கினர் . அதற்கு googol என்று பெயரிட்டனர். இதற்கு கணிதத்தில் 10 ன் அடுக்கு 100 என்று அர்த்தம். இதுவே பின்னர் கூகுள்(Google) என்று ஆனது.

இந்நிலையில் கூகுளுக்கு 21வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு கூகுள் நிறுவனம் தனது முகப்பை அலங்கரித்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பாக கூகுளின் முகப்பு பக்கம் இருந்ததை நினைவுப்படுத்தும் வகையில் பழைய கணினியில் தேடுபொறி காட்சியளிப்பதனை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது. பழைய கணிப்பொறியில் கூகுள் பக்கம் திறக்கப்பட்டு, கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Google , Google, Doodle, Publish, Computer, Search Engine, Birthday
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்