×

திருவள்ளூர் லாட்ஜில் சென்னை டாக்டர் தற்கொலை

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (58). எம்பிபிஎஸ் டாக்டர். புளியந்தோப்பு பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார். இவருக்கும், இவரது மனைவி கஸ்தூரிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் வந்த டாக்டர் ஜெகதீஷ் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். தொடர்ந்து, அன்று மாலை தனக்கு மார்பு வலிப்பதாகவும், திருவள்ளூரில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதாகவும் அவரது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மனைவி கஸ்தூரி நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு வந்தார். அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் டாக்டர் ஜெகதீஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் டாக்டரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடும்ப பிரச்னையா? வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.Tags : doctor ,Chennai ,suicide ,Tiruvallur Lodge ,doctor suicide ,Thiruvallur Lodge , Thiruvallur Lodge, Madras doctor ,suicide
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்...